புதுடெல்லி,
தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வரும் போராட்டம் முற்றிலும் நாடகம் என்று பா.ஜனதா விமர்சித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதி ராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர போராட் டத்தை முன்னெடுத்து வருகின்றன.
குறிப்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டு நோக்கி நேற்று பேரணி யும் சென்றனர்.
இதை சிவ தாண்டவம் என வர்ணித்த ராகுல் காந்தி, இதில் பங்கேற்க வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
காங்கிரசின் இந்த போராட்டங்களை பா.ஜனதா கடுமையாக குறைகூறியுள்ளது. குறிப்பாக சிவ தாண்டவம் என அறிவித்த ராகுல் காந்தியை கடுமையாக சாடியது.
இது தொடர்பாக கட்சித்தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் அடைந்து வரும் தோல்விக்காக காங்கிரஸ் கட்சி கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல் சாசன நிறுவனங்களை தாக்கி வருகிறது. ஆனால் அதன் தோல்விகளுக்கு தேர்தல் கமிஷன் காரணமில்லை.
மாறாக காங்கிரசின் தேர்தல் பின்னடைவுகளுக்கு அதன் சொந்த தலைமைதான் காரணம். ஏனெனில் அதன் தலைமையிடம் தொலைநோக்கு பார்வை இல்லை.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை பார்ப்பதற்கே ஒரு சிறப்பு நடைமுறை உள்ளது. வெறு மனே ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, உங்களுக்குத் தோன்றும் போதெல்லாம் ஆஜராக முடியாது.
காங்கிரசின் இந்த போராட்டம் முற்றிலும் ஒரு நாடகம். முழுக்க முழுக்க நாடகத்தன்மையாக உள்ளது. அதைத்தவிர வேறு எதுவும் இல்லை.
இது சிவ தாண்டவம் அல்ல. தெருக்களில் அராஜகத்தில் ஈடுபடும் குண்டர்களின் கும்பல் இது. சிவபெருமானின் பெயரைக்கூட பயன்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் ஆவேசமாக தெரிவித்தார்.