சண்டிகர்,
ரெயில்வே துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் மத்திய அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. அந்த வகையில் இன்றைய பயணிகளின் தேவை, எரிபொருள் சிக்கணம் மற்றும் மசு கட்டுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு வந்தே பாரத், அம்ரித் பாரத் ரெயில்களை அதிநவினத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் கார்பன் உமிழ்வை குறைக்கும் வகையில் ஹைட்ரஜன் ரெயிலை மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டது. இந்த ரெயில் அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் செல்லும் இது சுற்றுச்சூழலுக்கு எற்ற வகையில் நிராவியை மட்டுமே வெளியிடும்.
கடந்த ஆண்டு நடந்த மத்திய அரசின் படஜெட்டில் உள்நாட்டிலே 35 ஹைட்ரஜன் ரெயி்ல்கள் இதற்காக, ரூ.2,300 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஹைட்ரஜன் ரெயில் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. மொத்தம் 10 பெட்டிகள் கொண்டதாக இந்த ரெயில் தயாரிக்கப்பட்டு வந்தது.
ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. தெற்கு ரெயில்வே அதிகாரிகள் குழுவினர், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் முன்னிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது, சீரான வேகத்தில் இயக்கி பார்க்கப்பட்டது.
ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் நாட்டின் முதல் ரெயிலுக்கு ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 10 பெட்டி கொண்ட இந்த ஹைட்ரஜன் ரெயில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் நகரில் இருந்து சோனிபேட் வரை இயக்கப்பட உள்ளது. ரெயிலின் எரிபொருள் தேவைக்காக ஹரியானாவின் ஜிந்த் நகரில் 3000 கிலோ அளவை கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.