சென்னை,
م
விரைவு ரயில்களில், டிக்கெட் உறுதியான பயணியருக்கு மட்டுமே போர்வை, கம்பளி, தலையணை வழங்கப் படுகின்றன. 'ஏசி' பெட்டிகளில் உட்கார்ந்து செல்ல மட்டும் அனுமதிக்கப்படும் ஆர்.ஏ.சி., பயணியருக்கு போர்வை, கம்பளி வழங் கப்படுவதில்லை. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
'ஏசி' பெட்டியில்
விரைவு ரயிலில்பயணிக்கும் ஆர்.ஏ.சி., பயணியருக்கும் போர்வை, கம்பளி, தலையணை வழங்க வேண்டும் என, ரயில்வே வாரியம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவு பின்பற்றப்படுவதில்லை என, பயணியரிடம் புகார்கள் வந்தன. இதையடுத்து, விரைவு ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில், ஆர்.ஏ.சி., பயணியருக்கும் கட்டாயம் போர்வை மற்றும் தலையணை வழங்க வேண்டும். இதை அனைத்து மண்டல பொதுமேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே தொழிற் சங்க முன்னாள் நிர்வாகி மனோகரன் கூறுகையில், "போர்வை, கம்பளிகள், தலையணை பற்றாக்குறை காரணமாக, ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள், ஆர்.ஏ.சி., பயணியருக்கு கொடுக்க மறுக்கின்றனர்.
"முழு கட்டணமும் கொடுத்து விட்டு, உட்கார்ந்து செல்லும் பயணியரின் நிலை மோசமானது. இந்த விவகாரத்தில் ரயில்வேயின் புது உத்தரவு வரவேற்கதக்கது." என்றார்.