தேசிய செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை குறையும் இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த 8-ம் தேதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகாவில் அணைகள் நிறம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அண்டைய மாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக தமிழகத்திலும் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளது, மேலும் அணைகள் நிரம்பிவருகிறது. வெள்ளத்தினால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடலோர கர்நாடக மாவட்டங்களிலும் கனமழையினால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்தது.

இப்போது கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.