சில்வாசா,
குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நேற்று மாலை 5.30 மணி அளவில் தாத்ரா நகர் ைஹவேலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவருக்கு அங்குள்ள கல்லூரி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் மலர் தூவி, உற்சாக கோஷங்களுடன் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு ரூ.2,970 கோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது;
தாமன் பகுதி ஒட்டுமொத்த இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு 'மினி இந்தியா போலத் திகழ்கிறது. நமது நாடு தற்போது சீர்திருத்தம் மற்றும் மாற்றப் பாதையில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.7 சதவீதமாகப் பதிவாகி, உலக அளவில் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே நமது அரசின் முதல் இலக்கு. அதற்கேற்ப இந்த புதிய திட்டங்கள் தாமன் மக்களின் வாழ்க்கையை மேலும் எளிதாக்கும்."இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்