புதுடெல்லி,
கடந்த 1996-ம் ஆண்டு மே 22-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் ஒரு பஸ்சில் குண்டு வெடித்து 14 பேர் பலியானார்கள், விசாரணை கோர்ட்டில், அப்துல் ஹமீத் என்பவருக்கு மரண தண்டனையும், பப்பு என்ற சலீம் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, 2014-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு, விசாரணை கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தது. அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
விசாரணை முடிந்தநிலையில், நீதிபதிகள் விக்ரம்நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று ராஜஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது. அப்துல் ஹமீதுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சலீம் விடுதலை செய்யப்பட்டார். 6 பேர் விடுதலைக்கு எதிரான மாநில அரசின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், மூத்த நீதிபதி தலைமையில் புதிதாக விசாரணை நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.