தேசிய செய்திகள்

பெட்ரோலிய பொருட்களுக்கான கலால் வரியை மேலும் குறைக்க வேண்டும் - ராஜஸ்தான் முதல்-மந்திரி கோரிக்கை

பெட்ரோலிய பொருட்களுக்கான கலால் வரியை மேலும் குறைக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10-ம் குறைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்த விலைக்குறைப்பு தற்போதைய விலைவாசி நிலவரம் மற்றும் பணவீக்க விகிதம் ஆகிய பாதிப்புகளுக்கு ஏற்ற விதத்தில் இல்லை. மேலும் கூடுதல் விலைக்குறைப்பு செய்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடும்போது, இந்த விலைக்குறைப்பு காரணமாக மாநில அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களின் நலனை குறித்து இந்த நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த நிலையில் நான் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்வது என்னவென்றால், பெட்ரோலியம் பொருட்களுக்கான கலால் வரியை மேலும் குறைக்க வேண்டும். இவ்வாறு சய்தால் பணவீக்க விகிதம் ஓரளவு கட்டுக்குள் வரும். இதை மோடி கவனத்தில் கொண்டு செயல்படுத்த கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்