தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் சோகம்: லாரி மீது வேன் மோதி கோர விபத்து - 9 பேர் பலி

விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் வேனில் ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் உள்ள ஹடு ஷியாம்ஜி கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு வழிபாட்டை நிறைவு செய்தப்பின் மராட்டியத்திற்கு திரும்பியுள்ளனர்.

விபத்து - 9 பேர் பலி

இந்நிலையில், கோட்டா - உதய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சம்பன்புரா பகுதியில் சென்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT