தேசிய செய்திகள்

ஒடிசாவில் இன்று மாநிலங்களவை தேர்தல்: ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்கவைப்பு

ஒடிசாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு போட்டியிட 5 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் 4 மாநிலங்களவை காலியிடங்களுக்கு இன்று(திங்கட் கிழமை) தேர்தல் நடக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் பலத்தின்படி, ஆளும் பாஜகவிற்கு 2 இடங்களிலும், எதிர்க்கட்சியான பிஜு ஜனதாதளம் ஒரு இடத்திலும் நிச்சயமாக வெற்றிபெற முடியும். ஆனால் 4-வது இடத்தில் வெற்றிபெற இரு கட்சிகளுக்கும் எம்.எல்.ஏ.

இருப்பினும், 4-வது இடத்துக்கு திலீப் ரே என்ற பாஜக பிரமுகரை சுயேச்சையாக நிறுத்தி, அக்கட்சி ஆதரவுதெரிவித்துள்ளது. அதுபோல், தட்டேஸ்வர் ஹோடா என்பவரை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளராக பிஜு ஜனதாதளம் நிறுத்தி உள்ளது. எனவே, இன்று நடக்கும் வாக்கெடுப்பில் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால், ஆளும் பாஜக தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் 2 சொகுசு பஸ்கள் மூலம் துறைமுக நகரான பாரதீப்புக்கு அனுப்பி வைத் துள்ளது. அவர்கள் அங்கு திலீப் ரேக்கு சொந்தமான சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளனர். வாக்கெடுப்பில் பங்கேற்க அவர்கள் இன்று புவனேஸ்வரத்துக்கு வருவார்கள். 3 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறி வருகிறது.

இதேபோல் காங்கிரஸ் கட்சி தனது 8 எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு தெற்கு மாவட்டம் (ராமநகர்) பிடதியில் உள்ள ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். அவர்களுடன் முக்கிய நிர்வாகிகளும் இருக்கிறார்கள். நாடாளு மன்ற மாநிலங்களவையில் அந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி பா.ஜனதா வுக்கு வாக்களிப்பதை தடுக்க வேண்டி அவர்கள் பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை தேர்தலால் ஒடிசா அரசியல் வட்டாரத்தில் இன்று பரபரப்பான சூழல் நிலவுகிறது.