தேசிய செய்திகள்

புதுச்சேரி கவர்னரை சந்தித்து அமைச்சரவை பட்டியலை வழங்கிய ரங்கசாமி

ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை மே 13-ந்தேதி பதவியேற்கிறது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து, வரும் மே 13-ந்தேதி ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கிறது.

இந்த நிலையில், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து, அமைச்சரவை பட்டியலை ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரியில் பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர் பதவிகளை ஒதுக்க ரங்கசாமி ஏற்றுக்கொண்டதாகவும், பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவர் நமச்சிவாயம், திருநள்ளாறு தொகுதியில் வென்ற ராஜசேகரன் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.