தேசிய செய்திகள்

‘தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை’ - காவிரி நீர் ஒழுங்காற்று குழு!

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

புது டெல்லி,

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அரசு அதிகாரிகள், 15 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

இதற்கு, தங்களது அணைகளில் தற்போது 40 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது என்று கர்நாடக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக கூறினர்.

3000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை

தமிழ்நாடு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கக் கோரிய நிலையில், வினாடிக்கு 3000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

ஏற்கனவே காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நீரையே கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை என்று கூறப்படும் நிலையில், தற்போது பரிந்துரைத்துள்ள நீரையாவது கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT