புதுடெல்லி,
வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவு கூர்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவுகூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் உத்வேகமாக விளங்கும்.
காந்தியின் தலைமையால் உத்வேகம் பெற்ற வெள்ளையனே வெளியேறு முழக்கம், நமது சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியதுடன், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தியது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.