தேசிய செய்திகள்

70 அடி உயர மெஸ்சி சிலை அகற்றம் - மேற்கு வங்காள அரசு நடவடிக்கை

சிலையை ஆய்வு செய்த அதிகாரிகள் எந்த நேரத்திலும் விழுந்து மக்களுக்கு அபாயத்தை உருவாக்கலாம் என தெரிவித்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் போது அர்ஜென்டினாவின் கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 70 அடி உயர சிலை நிறுவப்பட்டது. இதை கடந்த ஆண்டு கொல்கத்தா வந்த மெஸ்சியே திறந்து வைத்தார்.

இந்த சிலை சமீபத்தில் அங்கு வீசிய புயலில் சிக்கியது. அதன் அடித்தளத்தில் இருந்து விடுபட்ட சிலை பின்னர் காற்றில் ஆடிக் கொண்டு இருந்தது. இது குறித்து அறிந்து அந்த சிலையை ஆய்வு செய்த அதிகாரிகள், எந்த நேரத்திலும் விழுந்து மக்களுக்கு அபாயத்தை உருவாக்கலாம் என தெரிவித்தனர்.

சிலை அகற்றம்

இதைத்தொடர்ந்து நேற்று அந்த சிலையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதன் பீடத்தில் இருந்து பிரித்து எடுத்தனர். பின்னர் கிரேன் மூலம் லாரியில் ஏற்றி எந்தவித சேதமும் ஏற்படாமல் எடுத்துச்சென்றனர். அது வேறு இடத்தில் நிறுவப்படலாம் என தெரிகிறது.