தேசிய செய்திகள்

கட்டுமான பொருட்கள் கொண்டுசெல்ல கட்டுப்பாடு: கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் பரிசீலனை

கேரளாவின் சிறப்பு சூழலை கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு சதீசன் கோரிக்கை விடுத்திருந்தார்.

திருவனந்தபுரம்,

மற்ற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் (கற்கள்/ஜல்லி உள்ளிட்டவை) கொண்டு செல்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தங்கள் அரசு பரிசீலிக்கும் என்று கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசனிடம், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உறுதியளித்ததாக கேரள முதல்-மந்திரியின் அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தது.

மறுபரிசீலனை

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தெற்கு மண்டலக் குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போது சதீசன் இந்த விவகாரத்தை எழுப்பியதாக அந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் சிறப்பு சூழலைக் கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு சதீசன் கோரிக்கை விடுத்தார் என்றும், இது தொடர்பாக மேலும் விவாதித்து விரைவில் தகுந்த முடிவை எடுக்க இரு முதல்-அமைச்சர்களும் எடுக்க ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

விஜய்க்கு கடிதம்

முன்னதாக, இக்கட்டுப்பாடுகளிலிருந்து கேரளாவுக்கு விலக்கு கோரி சதீசன், விஜய்க்கு எழுதி இருந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்​தில் இருந்து ஜல்​லிக் கற்​கள் உட்பட கட்​டு​மானப் பொருட்​களை வெளி மாநிலங்​களுக்கு கொண்டு செல்ல கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்ட தகவலை அறிந்​தேன். இந்த நடவடிக்​கை​யால் திருநெல்​வேலி, தென்​காசி, கன்​னி​யாகுமரி ஆகிய மாவட்​டங்​களில் இருந்து கேரளா​வுக்கு கட்​டு​மானக் கற்​கள் வரு​வது பெரு​மளவு பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கேரளா​வில் நடை​பெறும் தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​கள், தமிழகத்​தில் இருந்து கொண்டு வரப்​படும் கற்​களை நம்​பியே இருக்​கின்​றன.

எனவே, தற்​போதைய தடை​யால் கேரளா​வில் நடை​பெற்​று​வரும் பல தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​களின் கட்​டு​மானப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டு, அவை தாமதமடை​யும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தத் திட்​டங்​கள் கேரளா​வுக்கு மட்​டுமின்​றி, ஒட்​டுமொத்த தென் மண்​டலத்​தின் பொருளா​தார வளர்ச்​சி, பிராந்​திய இணைப்​பு, சரக்கு போக்​கு​வரத்து மற்​றும் சுற்​றுலா மேம்​பாட்​டுக்​கும் முக்​கிய​மானவை.

கேரளா பாராட்​டு​கிறது

குறிப்​பாக, விழிஞ்​சம் சர்​வ​தேச துறை​முகத்​தை​யும், வல்​லார்​பாடம் சர்​வ​தேச கண்​டெய்​னர் முனை​யத்​தை​யும் இணைக்​கும் தடையற்ற போக்​கு​வரத்​தின் மூலம் தென்​னிந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்​சி​யும் போட்​டித்​தன்​மை​யும் அதி​கரிக்​கும். இயற்கை வளங்​களை நிலை​யாகப் பாது​காக்​கும் தமிழக அரசின் கொள்கை நோக்​கங்​களை கேரளா பாராட்​டு​கிறது.

அதே​நேரம், தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களின் நியாய​மான தேவையைக் கருத்​தில்​கொண்டு ஒருசமநிலை​யான அணுகு​முறையை உரு​வாக்​கி​னால், உங்​கள் கொள்​கை​யிலும் பாதிப்​பும் ஏற்​ப​டா​மல் பார்த்​துக் கொள்​ளலாம்.

எனவே, கேரளா​வில் நடை​பெறும் தேசிய நெடுஞ்​சாலை மற்​றும் முக்​கிய உள்​கட்​டமைப்​புப் பணி​களுக்கு பிரத்​யேக​மாகத் தேவைப்​படும் ஜல்​லிக் கற்​களை மட்​டும் தடை​யின்றி கொண்டு செல்​ல வசதி​யாக, உரிய தளர்வு அல்​லது சிறப்பு நடை​முறையை ஏற்​படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.