இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிங்கு சிங், சமாஜ்வாடி கட்சியின் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ரிங்கு சிங் தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார்.
மேலும், உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார்.
ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் இருவருக்கும் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி லக்னோவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிரியா சரோஜ் உத்தரப் பிரதேச மாநிலம் மச்சிலிஷஹர் மக்களவைத் தொகுதியின் சமாஜ்வாடி கட்சி உறுப்பினராக உள்ளார்.தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், திருமணத்தில் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த முக்கிய வீரர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.