இம்பால்,
மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இனத்தவர்களுக்கு இடையே பிரச்சினை வெடித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த ஓராண்டாக அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த 4-ந்தேதி முதல்-மந் திரி கெம்சந்த் சிங் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. அப்போது குகி மற்றும் நாகா இனத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து குகி இனத்தவர்கள் கடுமையாக போராட்டம் நடத்தி வரு கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாகா இனத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று மணிப்பூரில் கலவரம் உச்சமடைந்தது. அங்குள்ள குகி இனத்தவர்கள் அதிகம் வாழும் உக்ரூல் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகள். அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் வன்மு றையை கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.