தேசிய செய்திகள்

ரூ.2,684 கோடி எல்.ஐ.சி. முதலீடு மோசடி: அனில் அம்பானி மீது சி.பி.ஐ. வழக்கு

எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.2,684.57 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தில் கடந்த 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.3,900 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. ஆனால் இந்த தொகையை முறைகேடாக வேறு நிறுவனங்களுக்கு மாற்றி முறைகேடு நடந்துள்ளது.

இந்த முறைகேட்டால் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.2,684.57 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக எல்.ஐ.சி. நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், அதன் முன்னாள் தலைவர் அனில் அம்பானி, முன்னாள் நிர்வாக இயக்குனர் சதிஷ் சேத் மற்றும் அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அனில் அம்பானி கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT