தேசிய செய்திகள்

கடந்த 7 மாதங்களில் ரூ.337 கோடி வருவாய் - தென்மேற்கு ரெயில்வே தகவல்

சரக்குகளை கையாண்டது மூலம் கடந்த 7 மாதங்களில் ரூ.337 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே சரக்குகள் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்மேற்கு ரெயில்வே சார்பில் இயங்கும் சரக்கு ரெயில்களில் வெளிமாநிலங்களுக்கு, வெளிமாவட்டங்களுக்கு சரக்குகள் ஏற்றி, இறக்கப்பட்டு வந்தது. அதன்படி 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரை 7 மாதங்கள் சரக்குகள் கையாண்டது மூலம் தென்மேற்கு ரெயில்வேக்கு ரூ.337 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 24.56 சதவிகிதம் அதிகமாகும்.

கொரோனாவுக்கு பின் ரெயில்களில் சரக்குகளை அனுப்புவது அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 5 மாதங்களில் 3.54 மில்லியன் டன் சரக்குகள் ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த சரக்குகள் கையாண்டதில் 1.30 மெட்ரிக் டன் இரும்பு தாது அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 16.6 சதவிகிதம் அதிகமாகும்.

சரக்குகளை அனுப்புவது நடப்பு ஆண்டில் 23.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 0.10 சதவிகிதம் கச்சா எண்ணெய் அனுப்பியது அதிகரித்துள்ளது. 14.3 சதவிகதம் சர்க்கரை, 147 சதவிகிதம் உரம், 10 சதவிகிதம் பெட்ரோலியம், இரும்பு ஆலைகளில் இருந்து இரும்பு மற்றும் கம்பிகள் அனுப்பியது 10 சதவிகிதமாக உள்ளது. சிமெண்டு நிறுவனங்களில் இருந்து 14.3 சதவிகிதம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT