திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை-மகர விளக்கு விழா நவம்பர் மாதம் மத்திய பகுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் வாரம் வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்கி உள்ளது.
இந்த பணிகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ரூ.551.5 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கேரளம் முதல்-மந்திரி சதீசன் தெரிவித்து உள்ளார். மாநில பொதுப்பணித்துறை மந்திரி பஷீர், சபரிமலையில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின் இந்த தொகையை அரசுக்கு பரிந்துரைத்தார்.
அதன்பேரில் இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி கூறினார். முன்னதாக, மண்டல பூஜை-மகர விளக்கு நிகழ்வுகள் சுமுகமாக நடைபெறுவதற்கு தேவசம்போர்டுடன் இணைந்து மாநில அரசு பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.