துமகூரு,
கர்நாடக மாநிலம், துமகூரு அருகே டாக்டர் தம்பதியின் நம்பிக்கையை பெற்று, ரூ.91.75 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகை களை திருடிய வேலைக்கார பெண் உள்பட 2 பேரை போலீ சார் அதிரடியாக கைது செய்தனர்.
துமகூரு மாவட்டம் ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் யஷ்வந்த். இவரது மனைவி நளினி. இவரும் டாக்டர் ஆவார். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு சினேகா (வயது 24) என்ற கர்ப்பிணி பெண், தனக்கு தனிப்பட்ட பிரச்சினை இருப்பதாக கூறி டாக்டர் தம் பதியிடம் உதவி கேட்டு வந்துள்ளார்.
இதனால் இரக்கப்பட்ட டாக்டர் தம்பதி, சினேகாவுக்கு தங்க ளது வீட்டில் அடைக்கலம் கொடுத்தனர். பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்புக்காக வீட்டில் தங்க அனுமதித்ததுடன், சினேகாவுக்கு வீட்டு வேலையும், உடன் வந்த அவரது பாட்டிக்கு தங்களது ஆஸ்பத்திரியிலும் வேலை கொடுத்து உணவு, சம்பளம் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
மேலும் சினேகாவின் கணவர் ராகேஷ் மற்றும் மாமியாருக்கும் தங்குமிடம் அளித்து உதவினர். இந்த நிலையில், டாக்டர் தம்பதியின் நம்பிக்கையை பயன்படுத்திக்கொண்ட சினேகா, கடந்த 6 மாதங்களாக வீட்டின் பல்வேறு அறைகளில் இருந்த லாக்கர்களின் சாவிகளை நைசாக திருடினார். பின்னர் லாக்கரை திறந்து சிறிது சிறிதாக 800 கிராமுக்கும் அதிகமான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடியுள்ளார். இதன் மதிப்பு ரூ.91.75 லட்சம் என கூறப்படுகிறது.
இதில் டாக்டர் தம்பதியின் பரம்பரை நகைகள், திருமண நகைகள் மற்றும் கணவர் பரிசளித்த நகைகளும் அடங்கும். இதற்கிடையே, வரலட்சுமி பண்டிகையையொட்டி லாக்கர்களை திறந்து நகைகளை எடுக்க டாக்டர் தம்பதி முயன்றனர். அப்போது சாவி காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனால் சாவி செய்பவரை அழைத்து வந்து லாக்கரை திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஜெயநகர் போலீசில் டாக்டர் தம்பதி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் வேலைக்கார பெண் சினேகா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சினேகா நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் திருடிய நகைகளை சவுமியா என்பவரிடம் கொடுத்து விற்பனை செய்த தும், அதில் வந்த பணத்தில் கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களை வாங்கிய தும் தெரியவந்தது.
இதையடுத்து சினேகா மற்றும் சவுமியாவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத் திய தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது. நகை திருட்டில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் டாக்டர் யஷ்வந்தின் தாயாரையும், அவர்களது குழந்தை யையும் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டிருந்தது அம்பலமானது. கொலைக்கு பின்னர் மர்ம நபர்கள் நகைகளை திருடிவிட்டு 2 பேரையும் கொலை செய்து தப்பிச் சென்றதாக நாட கமாடவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்தனர்.
கைதான 2 பெண்களிடம் இருந்து ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 220 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அடைக்கலம் கொடுத்த டாக்டர் வீட்டிலேயே கைவரிசை காட்டியதுடன், கொலை செய்யவும் சதித்திட்டம் தீட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.