கர்நாடகா,
கர்நாடகாவில் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற காரில் ரூ.1.14 கோடி ஹவாலா பணம் சிக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டிற்கு காரில் சென்ற பாக்கு வியாபாரி அப்துல் கபீர் (வயது 37) மற்றும் டிரைவர் முகமது செரீப்(39) ஆகியோரை பந்தலூர் அருகே 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, பணத்துடன் காரைக் கடத்திச் சென்றது.
போலீசாரைக் கண்டதும் மர்ம நபர்கள் காரை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பினர். மீட்கப்பட்ட காரை போலீசார் சோதனையிட்டபோது, ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1 கோடியே 14 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.