தேசிய செய்திகள்

மனிதனை நல்வழிப்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் பணி - மோகன் பகவத் பேச்சு

தனிமனித ஒழுக்கமும், பண்பும் வளர்ந்தால் தான் நாடு முன்னேறும் என மோகன் பகவத் கூறினார்.

நாக்பூர்,

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அகில பாரதீய வித்யா பரிசத் அமைப்பின் முன்னாள் தலைவரான யஷ் வந்த்ராவ் கெல்கரின் பிறந்தநாள் விழா நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் தேசபக்தியை அடிப்ப டையாக கொண்ட சித்தாந்தத்தின் கீழேயே செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் எழுச்சி மற் றும் முன்னேற்றமே எங்களது லட்சியம். தேசபக்தி தான் எங்களது ஒவ்வொரு செயலுக்கும் உந்துசக்தியாக உள்ளது.

சமூகத்தில் ஒவ்வொரு நபரையும் ஒரு சிறந்த மனிதராக உருவாக்கு வதே ஆர்.எஸ்.எஸ். சுயம்சேவக்குகளின் (தொண்டர்களின்) முக்கிய பணியாகும். தனிமனித ஒழுக்கமும், பண்பும் வளர்ந்தால் தான் நாடு முன்னேறும். அந்த பணியைத்தான் எங்கள் தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்கள்.