தேசிய செய்திகள்

ஆர்டிஐ சட்ட விதிகள் விவகாரம்: உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைப்பதாக அன்னா ஹசாரே அறிவிப்பு

நான் அரசை நம்பி இந்த போராட்டத்தை ஒத்தி வைக்கவில்லை. மாறாக அரசு எடுத்துள்ள நேர்மறையான முயற்சிக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

புதிய தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்.டி.ஐ புதிய விதிகளுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த விதிகளுக்கு மாநில அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. இதுகுறித்து அன்ன ஹசாரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது- புதிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதிகள், ஆர்.டி.ஐ. சட்டத்தின் நோக்கத்தையே பலவீ னப்படுத்தும் வகையில் இருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியில் போராடினர். மக்களின் இந்த ஒற்றுமை மற்றும் கடுமையான அழுத்தம் காரணமாகவே, புதிய ஆர்.டி.ஐ. விதிகளுக்கு தடை விதிக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

அரசு தற்போது இந்த சர்ச்சைக்குரிய விதிகளுக்கு தற்காலிகமாக மட்டுமே தடை விதித்துள்ளது. இதனை முழுமையாக ரத்து செய்யவில்லை. மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்தப்புதிய விதிகளை அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அரசு இந்த விவகாரத்தில் நிரந்தர முடிவு எடுக்க தவறினால், மீண்டும் ஒரு மிகப்பெரிய ஜனநாயக ' போராட்டத்தை நாங்கள் கையில் எடுக்க நேரிடும். அரசின் இந்த தற்காலிக தடை உத்தரவை அடுத்து 5-ந்தேதி(இன்று) முதல் நான் தொடங்கவிருந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட் டத்தை ஒத்திவைக்கிறேன். நான் அரசை நம்பி இந்த போராட்டத்தை ஒத்தி வைக்கவில்லை. மாறாக அரசு எடுத்துள்ள நேர்மறையான முயற்சிக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.