தேசிய செய்திகள்

ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்: புதிய வருமானவரி சட்டத்துக்கான விதிமுறைகள் வெளியீடு

புதிய வருமானவரி சட்டத்தில், புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை.

புதுடெல்லி,

தற்போதைய வருமானவரி சட்டம் 1961-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அச்சட்டம் மிக பழமையானதாக ஆகிவிட்டதாலும், புரிந்துகொள்ள கடினமாக இருப்பதாலும், தற்காலத்துக்கு ஏற்ற புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய வருமானவரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்டு 12-ந் தேதி, அம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்ட வடிவம் பெற்றது. புதிய சட்டத்தில், புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை. வார்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தேவையற்ற பிரிவுகள், பழைய வார்த்தை கள் நீக்கப்பட்டன. பிரிவுகள் எண்ணிக்கை 819-ல் இருந்து 536 ஆக குறைக்கப்பட்டது. அத்தியாயங்கள் எண்ணிக்கை 47-ல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டது. வார்த்தைகள் எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்தில் இருந்து 2 லட் சத்து 60 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய வருமானவரி சட்டம்-2025, ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. அதை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்டது.

“இந்த விதிமுறைகளை புதிய வருமானவரி விதிமுறைகள்-2026 என்று அழைக்கலாம். ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன” என்று அரசிதழ் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

இதில், மூலதன ஆதாயம், பங்குச்சந்தை விவகாரம், வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் வரிவிதிப்பு ஆகியவற்றில் கடுமையான ஒழுங்குமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது, மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங் களில் வசிக்கும் மாதச்சம்பள ஊழியர்கள் மட்டுமே சம்பளத்தில் 50 சதவீ தத்தை வீட்டு வாடகைப்படியாக விலக்கு பெறலாம். மற்ற நகரங்களை சேர்ந்த மாத சம்பளக்காரர்கள், 40 சதவீதம் வரை மட்டுமே வீட்டு வாடகைப்படி விலக்கு பெற முடியும்.

புதிய வருமானவரி விதிகளில், மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, ஐதராபாத், புனே, ஆமதாபாத், பெங்களூரு ஆகிய 8 நகரங்களை சேர்ந்த மாத சம்பளக்காரர்கள், சம்பளத்தில் 50 சதவீதம்வரை வீட்டு வாடகைப்படியாக விலக்கு பெறலாம். அதே சமயத்தில், வரிக்கழிவு பெற வீட்டு உரிமையாளருக்கும், வாடகை தாரருக்கும் இடையிலான உறவை தெரிவிப்பது கட்டாயமாகிறது.

வெளி நாட்டு வருமானம் மீதான வரிச்சலுகை கோரிக்கைகளுக்கு பட்டய கணக் காளர்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பு அதிகரிக்கிறது. பான் நகல்கள், பாதகமான தணிக்கை கண்காணிப்பினால் எழும் வரிபொறுப்பையும் சரிபார்க்க பட்டய கணக்காளர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கிறது.