டெல்லி,
உலக நாடுகள் பாகிஸ்தானுடன் நின்றபோது இந்தியாவுடன் நின்ற நாடு ரஷியா என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
முனிச் பாதுகாப்பு மாநாடு எனப்படும் சர்வதேச பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குறித்து விவாதிக்க உலக நாடுகளின் தலைவர்கள் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் மாநாடு ஆகும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான முனிச் பாதுகாப்பு மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் நேற்று மத்திய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா, ரஷியா இடையேயான உறவு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், இந்தியாவும், ரஹியாவும் வரலாற்று ரீதியில் நல்ல உறவை கொண்டுள்ளன. அந்த உறவு தொடர்ந்து வலுப்பெரும். நல்ல வரலாற்றையும், மோசமான வரலாற்றையும் மக்கள் மறக்க கூடாது. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடான உறவை வரலாற்று அனுபவங்கள் மூலம் நிர்ணயிக்கின்றன. இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து வந்தபோது உலக நாடுகள் பாகிஸ்தானுடன் நின்றபோது ரஷியா இந்தியாவுடன் நின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.