தேசிய செய்திகள்

சபரிமலை நடை நாளை மாலை திறப்பு

யோக நிலையில் இருக்கும் அய்யப்பனை தீபம் காட்டி துயிலெழுப்பியதும் கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும்.

சபரிமலை,

சபரிமலையில் மண்டல பூஜை மற்​றும் பந்தள அரச வம்​சப் பிர​தி​நி​தி​களின் தரிசனத்​துக்​குப் பிறகு கடந்த மாதம் 20-ம் தேதி கோவில் நடை​சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், கும்ப மாத (மாசி) வழி​பாட்​டுக்​காக கோவில் நடை நாளை (வி​யாழன்) மாலை 5 மணிக்கு திறக்​கப்பட உள்ளது.

சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி சபரிமலை நடையை திறப்பார்.யோக நித்திரையில் இருக்கும் அய்யப்பனை தீபம் காட்டி துயிலெழுப்பியதும் கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும்.

நடை திறக்​கப்​பட்ட அன்று எந்​தப் பூஜை​யும் நடை​பெறாது. தவக்​கோலத்​தில் இருக்​கும் அய்யப்பன் மீது பூசப்​பட்​டுள்ள விபூதி அகற்​றப்​படும். பின்​னர் இது பக்​தர்​களுக்​குப் பிர​சாத​மாக வழங்​கப்​படும்.

மறு​நாள் அதி​காலை 4 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டு, அபிஷேகம் உள்​ளிட்ட வழி​பாடு​கள் வரும் 17-ம் தேதி வரை நடை​பெறும். தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு தலை​மை​யில் மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி மாதாந்​திர வழி​பாடு​களை மேற்​கொள்ள உள்​ளார்.

தரிசனத்​துக்​கான ஆன்​லைன் முன்​ப​திவு கடந்த வாரம் தொடங்​கியது. பிப்.17 வரை சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும். sabarimalaonline.org.in மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். மாதாந்திர பூஜை என்பதால் கூட்​டம் குறை​வாகவே இருக்​கும். இதனால், பலரும் ஆர்​வ​முடன் முன்​ப​திவு செய்​து வரு​கின்​றனர்.

தேவசம் போர்டு அதி​காரி​கள் கூறும்​போது, “மண்​டல, மகர​விளக்கு பூஜை காலங்​களில் கூட்​டம் அதி​கம் இருக்​கும் என்​ப​தால் இது​போன்ற மாதாந்​திர வழி​பாடு தரிசனங்​களைப் பக்​தர்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்டும் என்றனர்​.