தேசிய செய்திகள்

காவிதான் எங்களது அடையாளம், அதை யாராலும் திருட முடியாது; தசரா கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேச்சு

காவி நிறம் என்பது எங்களுடைய அடையாளம். எங்கள் ஆன்மா. அதை எங்களிட மிருந்து பறிக்கவோ அல்லது திருடவோ யாராலும் முடியாது.

மும்பையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு உத்தவ் சிவ சேனா சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, மும்பையின் புகழ்பெற்ற சிவாஜி பூங்காவில் நேற்று மாலை உத்தவ் சிவசேனா கட் சியின் விஜயதசமி பேரணி பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு பேசியதாவது:-

காவி நிறம் என்பது எங்களுடைய அடையாளம். எங்கள் ஆன்மா. அதை எங்களிட மிருந்து பறிக்கவோ அல்லது திருடவோ யாராலும் முடியாது. சிவசேனாவின் உண் மையான பாரம்பரியமும், கொள்கையும் யாரிடம் இருக்கிறது என்பது இந்த தொண்டர்கள் கூட்டத்தை பார்க்கும்போதே ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்றாக தெரியும்.சின்னத்தையும், கட்சியின் பெயரையும் துரோகத்தால் திருடியவர்களால், பாலாசா கேப் தாக்கரேவின் கொள்கைகளையும், தொண்டர்களின் இதயத்தில் இருக்கும் காவி ரத்தத்தையும் ஒருபோதும் திருட முடியாது. இவ்வாறு அவர் ஆக்ரோஷமாக பேசினார்

SCROLL FOR NEXT