தேசிய செய்திகள்

முதல்-அமைச்சராக பதவியேற்கும் விஜய்க்கு ஒடிசா கடற்கரையில் மணல்சிற்பம்

விஜய்யின் உருவப்படம், தவெக கொடியுடன், ’வாழ்த்துகள் விஜய் அண்ணா’ என்று வரையப்பட்டுள்ளது.

பூரி,

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பல்வேறு போராட்டங்களை சந்தித்தது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு மத்தியில் 120 இடங்களுடன் முதல்-அமைச்சாராக விஜய் இன்று பதவியேற்கிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் மக்கள் மத்தியில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், ஒடிசாவின் புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், விஜய்க்கு பூரி கடற்கரையில் மணல்சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் விஜய்யின் உருவப்படம், தவெக கொடியுடன், ’வாழ்த்துகள் விஜய் அண்ணா’ என்று அவர் வரைந்துள்ளார்.