தேசிய செய்திகள்

சபரிமலை, மாளிகப்புரம் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு

சபரிமலையின் பாரம்பரிய வழக்கப்படி பந்தள அரசு குடும்ப வாரிசுகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.

சபரிமலை,

சபரிமலை, மாளிகப்புரம் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் வழிபாடுகள் நடைபெறும்.

இந்தநிலையில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கு மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வில், சபரிமலை கோவிலுக்கு 5 பேரும், மாளிகப்புரத்திற்கு 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் வீதம் சபரிமலை மற்றும் மாளிகப்புரத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்தநிலையில்,

இதற்கான குலுக்கல் இன்று காலை சன்னிதானத்தில் உஷ பூஜைக்கு பின் நடைபெற்றது. அதில்,

சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக அரிம்கர சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். மாளிகைப்புரத்து அம்மன் கோவில் மேல்சாந்தியாக தாமோதரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.

சபரிமலையின் பாரம்பரிய வழக்கப்படி பந்தள அரசு குடும்ப வாரிசுகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.பந்தளம் அரண்மனையில் இருந்து இரு குழந்தைகளும் இருமுடி கட்டி 18-ம் படி ஏறி சபரிமலை வந்தடைந்தனர். தேர்வு செய்யப்பட்ட மேல் சாந்திகள் மண்டல மகரவிளக்கு, பூஜைக்காலம் தொடங்கும் நவ.16-ல் பொறுப்பேற்பர்.

SCROLL FOR NEXT