தேசிய செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

பத்ராவதியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சிவமொக்கா-

மாணவி பலாத்காரம்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி புறநகர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளி. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த

பள்ளியில் உருது ஆசிரியராக அக்பர் பணியாற்றி வருகிறார். அக்பர், அந்த மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் உள்ள ஒரு அறைக்கு மாணவியை அழைத்து சென்று அக்பர், வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

ஆசிரியர் கைது

ஆனாலும் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அந்த மாணவி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவளது பற்றோர் பத்ராவதி புறநகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அக்பரை கைது செய்தனர்.

முன்னதாக மாணவிக்கு பத்ராவதி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவள் பலாத்காரம் செய்யப்பட்ட உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் கைதான ஆசிரியரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு