கோழிக்கோடு,
அரசு பேருந்து மோதியதில் பள்ளி மாணவி படுகாயம் அடைந்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருவம்பாடி பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து வந்துள்ளது. பேருந்து திரும்பிய போது அந்த வழியாக நடந்து சென்ற மாணவி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கீழே விழுந்த மாணவியின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த மாணவியை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு திருவம்பாடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.