தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 2-வது சம்பவம்.. பாலியல் வன்கொடுமை, கொலை குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சிறுமி, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தில், குற்றவாளியான பிரவாஸ் மொண்டல் என்பவர் இதேபோன்ற முறையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

வடக்கு 24 பர்கானாஸ்

மேற்கு வங்காளத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை குற்றவாளி போலீசாரின் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கைகாடா பகுதியில் தோழிகள் மற்றும் உறவினர்களுடன் இசை கச்சேரியை பார்க்க சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் தொலைபேசி அழைப்பு வந்தது. இதனை அடுத்து, அவர் வெளியே சென்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் அரை நிர்வாண கோலத்தில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில், உறவினரான பிரகலாத் தாஸ் (வயது 23) என்பவர் நள்ளிரவில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்ன்ர கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்நிலையில், அவரை சம்பவ பகுதிக்கு போலீசார் அழைத்து சென்றனர். குற்றம் எப்படி நடந்தது? என விசாரிக்க சென்ற இடத்தில் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது, அந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

மந்திரி பேட்டி

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கடந்த ஜூலையில், பரூய்பூர் நகரில் 11 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான பிரவாஸ் மொண்டல் என்பவர் இதேபோன்ற முறையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

விசாரணை அதிகாரியின் கைத்துப்பாக்கியை பறித்து, சுட்டு விட்டு தப்ப முயன்ற அவரை, தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் பிரவாஸ் பலியானார்.

இந்த சம்பவம் பற்றி பஞ்சாயத்து துறைக்கான மந்திரி திலீப் கோஷ் அளித்த பேட்டியின்போது, சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. சட்ட மீறலில் ஈடுபடுவோர் நீதியின் முன் கொண்டு வரப்படுவர் என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT