ஹெலிகாப்டர் 
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு

பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு வந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி

கர்நாடகத்தில் மெட்ரோ ரெயில் தொடக்கவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று பெங்களூருவுக்கு வந்தார். அவரு டன் பாதுகாவலர்களும் வந்திருந்தனர். பெங்களூருவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதிய வேளையில் 3 ஹெலிகாப்டர்களில் பிரதமர் மோடியும், அவரது பாதுகாவலர்களும் புறப்பட்டு சென்றனர். அந்த 3 ஹெலிகாப்டர்களும் ராணுவத்துக்கு சொந்தமான சாப்பர் ஹெலிகாப்டர்கள் என்று கூறப்படுகிறது. மைசூரு லலிதா மகால் ஹெலிபேடில் அந்த 3 ஹெலிகாப்டர்களும் தரையிறங்கின. பிரதமர் மோடி மைசூருவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார்.

ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு

அவர் சென்றபிறகு, பெங்களூருவில் இருந்து பிரதமர் மோடி மற்றும் பாதுகாவலர்கள் சென்ற 3 ஹெலிகாப்டரில் 2 ஹெலிகாப்டர்கள் மைசூருவில் இருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு திரும்பிவிட்டன. ஆனால் ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படவில்லை. அதனால் அந்த ஹெலிகாப்டர் மைசூரு லலிதா மகால் ஹெலிபேடிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரில் தான் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதா? என்பது பற்றி அதிகாரிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று வந்தடையும்

பழுதான ஹெலிகாப்டரை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இன்று (சனிக்கிழமை) காலையில் அந்த ஹெலிகாப்டர் மைசூருவில் இருந்து புறப்பட்டு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தை வந்தடையும் என்று தக வல்கள் வெளியாகி உள்ளது.இந்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT