மும்பை,
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 260 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. இதேபோன்று நிப்டி குறியீடு 10 ஆயிரத்து 500 புள்ளிகளை எட்டியிருந்தது.
ஆசிய சந்தைகளிலும் முன்னேற்ற நிலையே காணப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 260.12 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 265.88 ஆக உள்ளது. இது கடந்த வெள்ளி கிழமை 407.40 புள்ளிகள் இழப்புடன் 34 ஆயிரத்து 005.76 ஆக இருந்தது.
தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 81.65 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 536.60 ஆக உள்ளது. இதில், ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், சன் பார்மா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.
ஆசிய பகுதியில், ஹாங்காங்கின் ஹேங்செங் 0.64 சதவீதத்துடனும் மற்றும் ஷாங்காய் காம்போசிட் குறியீடு 0.39 சதவீதத்துடனும் உயர்ந்து காணப்பட்டன.