மும்பை,
அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக அளவில் சந்தையில் பலவீன நிலை உள்ளது. இந்தியாவில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு அமெரிக்க கரன்சிகளின் தேவை அதிகரித்த நிலையில் ரூபாயின் மதிப்பு குறைந்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 2 பைசாக்கள் உயர்ந்து ரூ.67.99 ஆக இருந்தது.
இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 148.34 புள்ளிகள் குறைந்து 35,399.92 ஆக இருந்தது.
தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 52.55 புள்ளிகள் குறைந்து 10,747.30 ஆக இருந்தது.
எண்ணெய் மற்றும் வாயு, மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் 1.31 சதவீத சரிவு காணப்பட்டது.