நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங் ஆப் இந்தியா எனப்படும் எஸ்.பி.ஐ ஆன்லைன் பண பரிமாற்றத்தில் சேவை கட்டணத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.25,000 க்கு மேற்பட்ட தொகையை, செல்போன் செயலி, இண்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் பரிமாற்றம் செய்தால் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.
அதாவது 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முதல் ஒரு லட்சம் வரை ஐஎம்பிஎஸ் முறையில் பணம் அனுப்பினால் 2 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையில் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், 6 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சேவை கட்டணம் + ஜிஎஸ்டி என்பது எஸ்பிஐயின் இண்டர்நெட் பேங்கிங், செல்போன் செயலி வழியிலான பணப்பரிமாற்றம் யோனோ செயலி வழியிலான பணப்பரிமாற்றத்துக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ரூ.25 ஆயிரத்துக்குள் பணப்பரிமாற்றம் செய்தால் சேவை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கிடையாது. எஸ்பியின் இந்த புதிய அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.