டெல்லி,
வங்காளதேசம், மியான்மர் போன்ற அண்டை நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கோனோர் இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை கண்டறிந்து கைது செய்து சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த ஆப்பிரிக்க நாட்டினர் 7 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். விசா காலம் முடிந்தும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் நைஜீரியாவையும், எஞ்சிய 2 பேர் கானா நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 7 பேரையும் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.