தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்; குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது

சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் பிகானேரில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகலில் ராஜஸ்தானின் பிகானேரில் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் நகரின் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

அப்பகுதியில் பலத்த காற்று அடர்த்தியான புழுதிப் புயல் வானத்தை அடர் ஆரஞ்சு-பழுப்பு நிறமாக மாற்றியது. அப்பகுதியில் சூறாவளி போல் காற்று வீசியதால் மரங்கள் குலுக்கி அசைந்தன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இந்தப் புழுதிப் புயல், வடமேற்கு இந்தியாவைப் பாதிக்கும் நிலையற்ற வானிலையின் ஒரு பகுதியாகும். அங்குக் கடுமையான வெப்பத்தைத் தொடர்ந்து பலத்த காற்று, புழுதிப் புயல்கள் மற்றும் பல பகுதிகளில் ஆங்காங்கே மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.