தேசிய செய்திகள்

மியான்மரில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு

மியான்மரில் அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

மியான்மர் நாட்டில் இந்திய எல்லை அருகே அமைந்த பகுதியில் இன்று அதிகாலை 12.54 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 82 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

SCROLL FOR NEXT