திருவனந்தபுரம்,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என பேரிடர் மேலாண்மை ஆணயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயல்பை விட அதிக வெப்பநிலை நீடிப்பதால் பகல் நேரங்களில் மக்கள் ஊரடங்கு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், காலை 11 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.