தேசிய செய்திகள்

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கதகளி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு

கதகளி பயிற்சியின்போது தனக்கு நடந்தது குறித்து ஆலோசகரிடம் சிறுமி கூறினாள்.

பாலக்காடு,

கேரளத்தில் கதகளி என்ற பாரம்பரிய நடனம் கலையாக உள்ளது. இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் ஆர்வமாக கற்று வருகின்றனர். இந்த நிலையில் பாலக்காடு கல்லேக்குளங்கரா கிராமத்தில் வெங்கிட்டராமன் (வயது 56) என்பவர் கதகளி பயிற்சி அளித்து வருகிறார்.

இவர் தன்னிடத்தில் கதகளி பயிற்சி பெற வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கதகளி பயிற்சியின் போது தனக்கு நடந்தது குறித்து ஆலோசகரிடம் சிறுமி கூறினாள். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீ சார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு வெங்கிட்டராமன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான வெங்கிட்டராமனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.