தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அதிர்ச்சி: கோவிலுக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளி

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

மும்பை,

மராட்டியத்தில் சிவன் கோவிலுக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்ச்வாட் அருகே நிக்டி என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான சிவன் கோவில் உள்ளது.

இந்நிலையில், இந்த சிவன் கோவிலில் நேற்று முன் தினம் காலை 11 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த சிறுமி வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, அந்த கோவிலுக்குள் நுழைந்த இளைஞர் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த சிறுமிக்கு கோவிலுக்கு வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவிலுக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் அப்பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

சிவன் கோவிலில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த சிறுமியை கோவிலுக்குள் நுழைந்து கட்டுமான தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT