நொய்டா,
’ராம்பூர் கிரேஹவுண்ட்’ நாய் கடித்து குதறியதில் 'பிளாக் பக்' நாய் உயிரிழந்தது.
உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள கிராண்ட் ஓமாக்ஸ் குடியிடுப்பு பகுதியில் உள்ள சாலையில் காலை நேரத்தில் பெண் ஒருவர் தனது சிறிய ' பிளாக் பக்' ரக நாயுடன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக ஒரு வளைவில் திரும்பியபோது ‘ராம்பூர் கிரேஹவுண்ட்’ ரக நாய் திடீரென குறுக்கே வந்து ‘பிளாக் பக்’ நாயின் உரிமையாளரை தாக்கி கீழே தள்ளிவிட்டது.
பின்னர், அங்கிருந்த அவரது சிறிய நாயை கடித்து குதறியது. உடனடியாக பொதுமக்கள் சூழ்ந்து அந்த சிறிய நாயை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, ‘பிளாக் பக்’ நாயை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பொது இடத்தில் வளர்ப்பு நாய் மற்றொரு நாயை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.