தேசிய செய்திகள்

வேன் மீது துப்பாக்கிச்சூடு: 2 போலீஸ்காரர்கள் பலி; 3 கைதிகள் தப்பி ஓட்டம்

வேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 போலீஸ்காரர்கள் பலியாயினர். இந்த சம்பவத்தில் 3 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் கோர்ட்டில் 24 விசாரணை கைதிகளை ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அவர்களை மீண்டும் சிறைக்கு ஒரு வேனில் அழைத்து சென்றனர். பனிதர் கிராமம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வேன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

SCROLL FOR NEXT