தேசிய செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு: பெங்களூருவில் ஓட்டல்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெங்களூருவில் இன்று முதல் ஓட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் நீடித்து வருகிறது. இதனால் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து தடைபட்டுள்ளது. இந்தநிலையில் பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஓட்டல்கள் வேலை நிறுத்தம் தொடங்குவதாக பெங்களூரு மாநகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண சென்னை ஒட்டல் உரிமையாளர் சங்கங்கள் கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.