தேசிய செய்திகள்

‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கையாளர் படுகொலையில் பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட மூவர் அடையாளம் காணப்பட்டனர்

‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கையாளர் படுகொலையில் பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட மூவர் அடையாளம் காணப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியாகும் ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையின் ஆசிரியர் சுஜாத் புகாரி 14-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியை போலீஸ் வெளியிட்டது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்திரிக்கையாளரின் பாதுகாவலர்களும் உயிரிழந்தார்கள். இதுதொடர்பான விசாரணை தொடர்ந்தது.

இப்போது பத்திரிக்கையாளர் படுகொலையில் பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட மூவர் அடையாளம் காணப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் படுகொலையில் மர்மம் விலகியுள்ளது, அவரை கொலை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன். ஏற்கனவே போலீஸ் காவலில் இருந்து தப்பிய நாவீத் ஜூட் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு இதில் தொடர்பில்லை என தெரியவந்தது. இப்போது கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.