நேபாளம்  
தேசிய செய்திகள்

நேபாளம் வெள்ளப்பெருக்கு எதிரொலி: சிக்கிமில் 16 பனிப்பாறை ஏரிகளில் சென்சார் பொருத்தம்

சிறியது, பெரியது என சுமார் 400 பனிப்பாறை ஏரிகள் சிக்கிமில் உள்ளன. இதில் ஆபத்தானவை என 16 பனிப்பாறை ஏரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேபாள வெள்ள பேரிடரை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 பனிப்பாறை ஏரிகளில் சென்சார் பொருத்தி உள்ளது சிக்கிம் அரசு.

திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ம் தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள், மண், சேறு - சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

நேபாளத்தில் 2-வது வாரமாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இதுவரை 1000 அயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4,400க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கிறார்கள். சேறு சகதிகள் நிறைந்து உள்ள பகுதிகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்களை நேபாள ராணுவத்தினர் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேபாளத்தில் பனிப்பாறை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சிக்கிம் மாநிலத்தில் அதிக ஆபத்துள்ள 16 பனிப்பாறை ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள்

சிக்கிம் மாநிலத்தில் பெரியது, சிறியது என 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இதில் 16 ஏரிகள் அதிக ஆபத்துள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 13 ஏரிகள் வடக்கு சிக்கிமிலும், 3 ஏரிகள் மேற்கு சிக்கிமிலும் உள்ளன.

இந்த ஏரிகளின் நீர்மட்டம் மற்றும் நீரின் அளவில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க பெரும்பாலான ஆபத்தான ஏரிகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.

அதிக ஆபத்துள்ள ஏரிகள்

இதுகுறித்து சிக்கிம் மாநில நிவாரண ஆணையர் ரின்சிங் செவாங் கூறுகையில், பனிப்பாறை ஏரிகளின் நீரின் அளவு அதிகரிக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக, அதிக ஆபத்துள்ள ஏரிகள் அமைந்துள்ள வடக்கு சிக்கிமில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் "வடக்கு சிக்கிமில் ஏரிகள் பெரும்பாலும் அமைந்துள்ள பல இடங்களில், நீர்மட்டம் உயருவது குறித்து எங்களுக்குத் தெரிவிப்பதற்காக, முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளையும் தானியங்கி வானிலை நிலையங்களையும் நாங்கள் நிறுவியுள்ளோம்," என்று செவாங் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT