தேசிய செய்திகள்

சிக்கிம் மாநிலம் உருவான தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

சிக்கிமில் நான் பெற்ற அன்பான வரவேற்பு என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்று பிரதமர் என்று தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சிக்கிம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

‘என் சகோதர சகோதரிகளுக்கு அவர்களின் மாநில தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு சிக்கிமின் பங்களிப்பு பெரிதும் மதிக்கப்படுகிறது. மாநில மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் செழிப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.

சிக்கிம் தனது 50-வது மாநில தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடும் வேளையில் இந்த நல்வாய்ப்பு அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, அந்தக் கொண்டாட்டங்களில் சிக்கிம் மக்களுடன் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிக்கிமில் நான் பெற்ற அன்பான வரவேற்பு என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். வரும் காலங்களிலும் சிக்கிமின் வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்.’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.