புதுடெல்லி,
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் ஈரான் மீதான அமெரிக்கா மற் றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு மத்திய அரசு எதிர்வினையாற்றாமல் இருப்பதை காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமான சோனியா கடுமையாக சாடியுள்ளார். நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டு ரையில், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை தொடர்ந்து அந்த நாடு ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை சுட்டிக் காட்டி இருந்தார்.
பாலஸ்தீனம், ஈரான் மற்றும் பரந்த மத்திய கிழக்கு நாடு களில் உள்ள தனது வரலாற்று நட்பு நாடுகளிடமிருந்து இந்தியா தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், உலகளாவிய பொது கருத்திலிருந் தும் தன்னைத் தூரப்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள சோனியா, அதேநேரம் பாகிஸ்தான் திடீரென உள்ளே நுழைந்து ஒரு மத்தி யஸ்தரின் இடத்தைப் பிடித்துக்கொள்ளவும் மத்திய அரசு வழிவிட்டுள்ளதாக சாடியுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையில் மோடி அரசின் தொடர்ச்சியான மவுனத்தை பகுத்தறிவு ரீதியாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ விளக்கவே முடியாது என்றும் வருந்தியுள்ளார்.