ஆந்திர மாநிலத்தில் விரைவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெறவுள்ளது. இதற்கிடையே அம்மாநிலத்தில் உள்ள தாடேபள்ளி என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். அப்போது அவர், 'எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது கட்சித்தொண்டர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் என்ன நடந்தது என்பதை எல்லோரும் பார்த்தோம். வாக்குகள் குறைந்தாலும் அதிகரித்தாலும் ஆபத்து என்பதை அம்மாநில தேர்வு முடிவுகள் தெளிவாக கூறுகிறது. 2 மாநிலத்திலும் ஏராளமான வாக்காளர் களை நீக்கினார்கள்.
குறிப்பாக மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் 45,982 பேரை நீக்கினார்கள். அவர் தோல்வி அடைந்தார். தமிழ் நாட்டில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும் எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர் பெயர்களை நீக்கினார்கள். அவரும் தோல்வி அடைந்தார்.கட்சி தொண்டர்கள் அனைவரும் இந்த இரண்டு அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எஸ்.ஐ.ஆர். என்பது எவ்வளவு முக்கியம் என்பதை சொல்வதற்காகத்தான் இதையெல்லாம் சொல்ல வேண்டி வருகிறது' என்று பேசினார்.